/* */

காவிரி கட்டளைக் கால்வாயில் இருந்து கந்தர்வகோட்டை தொகுதிக்கு புதிய நீர்வழிப்பாதை

முதல்வருக்கு கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை கோரிக்கை விடுத்துள்ளார்

HIGHLIGHTS

காவிரி கட்டளைக் கால்வாயில் இருந்து  கந்தர்வகோட்டை தொகுதிக்கு புதிய நீர்வழிப்பாதை
X

கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட மக்களின் மிக முக்கியமான 10 கோரிக்கைகளை தொகுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழியாக, தமிழக முதல்வருக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கூனம்பட்டி வழியாகச் செல்லும் ஆச்சம்பட்டி அணைக்கட்டு வழியாக கந்தர்வகோட்டை தொகுதிக்கு புதிதாக கட்டளைக் கால்வாய் நீர்வழிப்பாதை அமைத்துத் தருமாறு தமிழக முதல்வருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கோரிக்கை மனு அளித்துள்ளார்.

ஒவ்வொரு தொகுதியிலும் மிக முக்கியமான 10 முன்னுரிமை கோரிக்கைகளை தொகுத்து தன்னிடம் வழங்குமாறு அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதனடிப்படையில் கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட மக்களின் மிக முக்கியமான 10 கோரிக்கைகளை தொகுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழியாக, தமிழக முதல்வருக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள் விவரம்: தஞ்சாவூர் மாவட்டம் கூனம்பட்டி வழியாகச் செல்லும் கட்டளைக் கால்வாயிலிருந்து ஆச்சம்பட்டி அணைக்கட்டு வழியாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மின்னாத்தூர் பெரியகுளத்தை இணைக்கும் வகையில் புதிய நீர்வழிப்பாதை அமைத்துத்தர வேண்டும். இதன்மூலம் குன்றாண்டார்கோவில், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஒன்றியங்களில் சங்கிலித் தொடர்போல நூற்றுக்கும் மேற்பட்ட பாசனக் கண்மாய்களில் தண்ணீரை சேமித்து பாசன வசதிபெற முடியும். எனவே, மேற்படி பகுதிகளில் உள்ள வேளாண் குடிமக்களின் 200 ஆண்டுகால கனவு திட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவமனைகளைத் தரம் உயர்த்த வேண்டும்:கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, கீரனூர் தாலுகா மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், ஸ்கேன் செண்டர், டயாலிசிஸ் உபகரணம், பிணவறை, உடல் கூறாய்வு அறை உள்ளிட்ட வசதிகளை உருவாக்கி மேம்பட்ட மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்த வேண்டும். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் தாய், சேய் நல மருத்துவமனை(சீமாங் செண்டர்)-க்கு போதிய கட்டிடம், கருவிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். குன்றாண்டார்கோவில் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர வேண்டும்.

துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம்: கந்தர்வகோட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். கந்தர்வகோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். கந்தர்வகோட்டையில் போக்குவரத்து காவல் நிலையமும் அமைத்துத்தர வேண்டும்.

சுற்றுவட்டப் பாதை: கறம்பக்குடி வட்டாரத்தைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களுக்கு ஒரே நரகப் பகுதியாக கறம்பக்குடி மட்டுமே உள்ளது. அப்பகுதி மக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகளுக்கு கறம்பக்குடியை நோக்கியே செல்ல வேண்டி உள்ளது. இதனால், கறம்பக்குடி எப்பொழுதுமே போக்குவரத்து நெருக்கடிமிக்க நகரமாக உள்ளது. விழாக்காலங்கள், பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து நெருக்கடி மிகவும் அதிக அளவில் உள்ளது. எனவே, கறம்பக்குடி பேரூராட்சியை சுற்றி சுற்றவட்டப் பாதை (ரிங் ரோடு) அமைத்துத்தர வேண்டும். இதேபோல போக்குவரத்து நெருக்கடியை சந்திக்கும் கந்தர்வகோட்டை ஊராட்சியை சுற்றியும் சுற்று வட்டப்பாதை அமைத்துத்தரவேண்டும்.

அரசு கலைக்கல்லூரி: குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு கலைக்கல்லூரி அமைத்துத்தர வேண்டும். கந்தர்வகோட்டையை மையமாகக்கொண்டு பள்ளிக் கல்வித்துறையின்கீழ் மாவட்டக் கல்வி அலுவலகம் அமைத்துத்தர வேண்டும்.

போக்குவரத்துப் பணிமனை: கீரனூரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 34 ஆண்டுகளுக்கு முன்பாக பட்டா வழங்கப்பட்டும் இதுநாள் வரை போக்குவரத்துப் பணிமனை அமைக்கப்படவில்லை. எனவே, விரைவாக போக்குவரத்துப் பணிமனை அமைத்துத்தர வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, கீரனூரிலிருந்து கிராமப்புறப் பகுதிகளுக்கு புதிய போக்குவரத்து வழித்தடங்கள் அமைத்து புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.

சுற்றுலாத்தலம்: தொல்லியல் அடையாளங்கள் நிறைந்துள்ள நார்த்தாமலை, குன்றாண்டார்கோவில் பகுதிகளில் புதிதாக சுற்றுலாத்தளங்கள் அமைக்க வேண்டும். தொல்லியல் ஆர்வலர்களும், மாணவர்களும், பொதுமக்களும் அப்பகுதிகளுக்கு சென்றுவர வசதியாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

அரசு கிரானைட் தொழிற்சாலை: நார்த்தாமலை, மேலூர், பொம்மாடிமலை, வத்தானாக்குறிச்சி, உப்பிலிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் கனிம வளங்களைப் பயன்படுத்தி அரசு சார்பில் கிராணைட், எம்.சாண்ட், பி.சாண்ட் உற்பத்திக்கான தொழிற்சாலைகளைத் தொடங்கி அரசுக்கு வருவாயைப் பெருக்குவதோடு, இப்பகுதி இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்போட்டை: கந்தர்வகோட்டை தொகுதியில் கிடைக்கும் விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் அரசு தொழிற்பேட்டை (சிப்காட்) தொழில் பூங்கா அமைத்துத்தர வேண்டும்.

கோட்டாட்சியர் அலுவலகம்: கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குளத்தூர் வருவாய் வட்டங்களையும், புதுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை பகுதிகளையும் உள்ளடக்கி கந்தர்வகோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்துத்தர வேண்டும்.இவ்வாறு முதல்வருக்கு எம்.சின்னதுரை அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை அளிக்கும் நிகழ்வில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக, சிபிஎம் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Oct 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் போலி டீத்தூள் விற்பனை; அதிகாரிகள் நடவடிக்கை
  2. தென்காசி
    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்மழை; குற்றாலம் அருவி,...
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றிய அலுவலர்களுக்கு கமகம...
  4. Trending Today News
    கடற்கரை பாறை இடுக்கில் விழுந்த ஐபோன்..! கெடைச்சிருச்சா..?
  5. நாமக்கல்
    சாலையை மறைத்து வளர்ந்து நிற்கும் சீமைக்கருவேல மரங்கள் : பொதுமக்கள்...
  6. திருத்தணி
    கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு; மாவட்ட ஆட்சியர்...
  7. ஈரோடு
    தாளவாடி மலைக்கிராமத்தில் வாந்தி, பேதியால் அடுத்தடுத்து 6 பேர்...
  8. சினிமா
    ஸ்டைலான தோற்றத்துடன் ஃபேஷன் உலகில் கலக்கும் அனன்யா பாண்டே
  9. வீடியோ
    🔴LIVE: பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்கள்...
  10. உலகம்
    பூமியின் குரல்வளையை நெரிக்காதீர்..! கடல்களை காப்போம்..!