இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய கணித தினம் கடைபிடிப்பு

இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய கணித தினம் கடைபிடிப்பு
X

கந்தரவகோட்டை அருகே மட்டங்கால் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய கணித தினம் கடைபிடிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் இல்லம்தேடி கல்வி மையத்தில் தேசிய கணித தினம் கடைப்பிடிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய கணித தினம் கடைபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மட்டங்கால் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய கணித தினம் கடைபிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர் வளநிஷா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் தலைமை வகித்தார்.

கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட இணை செயலாளர் முனைவர் பிச்சைமுத்து, ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தேசிய கணித தினம் குறித்து பேசியதாவது:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் தேதி தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது .கணித மேதை சீனிவாச ராமானுஜரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது என்றும் இந்நாளை முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் 2012 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவித்தார். சீனிவாச ராமானுஜனின் 125வது பிறந்த நாளில் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு அவர் சென்றிருந்த போது அவருடைய அறிவிப்பு வந்தது. இந்த தேசிய கணித நாள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கணிதம் வகிக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறுகிறது என்றும் மக்கள் தங்கள் சுய-கற்றல் திறன்களை வளர்க்கவும் மேலும் கணித அறிவு, பகுத்தறிவுடன் சிந்திக்கவும் தூண்டுகிறது என்றும் பேசினார்.

இந்த நாளில், மனிதகுல வளர்ச்சிக்கு கணிதம் செய்த பங்கு பற்றி நாம் கற்றுக் கொள்வதன் மூலம் இளம் தலைமுறைகள் அறிவு மேம்பட தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் ஒன்று கூடவேண்டும். அறிவியல் வளர்ச்சிக்கும், ஆய்வு மனப்பான்மையை வளர்ப்பதற்கும், சுவாரஸ்யமான புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் நாம் ஒன்றாக கை கோப்பதற்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இது போன்ற தினங்களை பற்றி பயிற்சிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தேசிய கணித தினத்தன்று, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கணிதத்தைப் பற்றிய அறிவைப் பரப்புவதன் மூலமும், அன்றாட வாழ்க்கையில் அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை மக்களுக்கு கற்பிப்பதன் மூலமும் நாம் கணித அறிவுமிக்க புதிய சமூகத்தை உருவாக்கலாம் என்றார் அவர். இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் சௌமியா, சிந்து நதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தன்னார்வலர் கௌரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!