மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
பைல் படம்
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில்மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு நேற்று முன்தினம் முகாம் நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் தலைமை வகித்து பேசுகையில், அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை, அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ஆகியவற்றை பெற்று பயனடைய வேண்டும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து மாவட்ட உதவித் திட்ட அலுவலர் தங்கமணி பேசுகையில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழின் பேரில் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை, ரயில் பேருந்து பயணச் சலுகை மனநல மருத்துவர் ஆலோசனை ,எலும்பு மூட்டு மருத்துவர் ஆலோசனை காது மூக்கு தொண்டை மருத்துவ ஆலோசனை, கண் மருத்துவர் ஆலோசனை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு குழந்தைகள் நல அலுவலர் ஆலோசனை உள்ளிட்டவற்றில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ரமேஷ் உதவித் திட்ட அலுவலர் சுதந்திரன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அடையாள அட்டையினை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்டக் கவுன்சிலர் ஸ்டாலின், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன், மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, ப்ரானோ, ஹேமா ஹரிணி, சரவணன், வினித் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோசலை, செந்தில் குமார் தலைமை ஆசிரியர் பழனிவேல், இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, சமூக ஆர்வலர் வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர் பயிறுநர்கள் சங்கிலி முத்து,சுரேஷ்குமார், பாரதிதாசன், ராஜேஸ்வரி, இயன்முறை மருத்துவர் சரண்யா, சிறப்பாசிரியர்கள் அறிவழகன்,ரம்யா ராணி, ராதா, பிரியா, தீபா, கணக்காளர்கள் ராஜேஸ்வரி, ராஜலட்சுமி, உதவியாளர் தாமரைச்செல்வி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
முன்னதாக கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் பழனிவேல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிறைவாக மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu