மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில்மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில்மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அவர்களின் ஆணையின்படியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமினை புதுக்கோட்டை கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் கோவிந்தன் ( தொடக்கக் கல்வி ) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் குமரவேல், மாற்றுத் திறன் குழந்தைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் சுரேஷ், இல்லம் தேடிக் கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கலையரசன், மங்கனூர் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மைய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, நன்கொடையாளர் வென்னிலா பாண்டியன் ஓவிய ஆசிரியர் கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாமில்,எலும்பு மூட்டுகள் சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை நிபுணர், கண் மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய ஐந்து வகையான மருத்துவ குழுக்கள் மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு மாற்றுத்திறன் அடையாள அட்டை தகுதி உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த அடையாள அட்டையை வைத்து குழந்தைகள் அரசின் சலுகைகளான இலவச ரயில் பேருந்து பயணம், கல்வி உதவித்தொகை, குழந்தைகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, அரசு வேலை வாய்ப்புகளில் 4% சதவீத இட ஒதுக்கீடு, காதொலிக்கருவி, மூக்கு கண்ணாடி, உதவி உபகரணங்கள் ஆகியவற்றை பெற்று பயன் பெறலாம்.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கிலி முத்து, ராஜேஸ்வரி, நந்தினி இயன்முறை மருத்துவர் சரண்யா , சிறப்பாசிரியர்கள் அறிவழகன், ரம்யா ராதா, ராணி, பிரியா, லீலா கணக்காளர்கள் ராஜேஸ்வரி, ராஐலெட்சுமி ஆகியோர் மருத்துவ முகாமிற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முகாமில் 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதில் 35 நபர்கள் அடையாள அட்டை தகுதி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டு வழங்கப்பட்டது. முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.நிறைவாக ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu