கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் கட்சியின் சிறப்பு பேரவைக்கூட்டம்

கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் கட்சியின் சிறப்பு பேரவைக்கூட்டம்
X

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதியில் நடைபெற்ற  சிபிஎம் கட்சியின் பேரவை கூட்டத்தில் பேசிய அத்தொகுதியின் எம்எல்ஏ சின்னத்துரை.

தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி முறையாக கையாள்வது தொடர்பாக எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார்

கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினன் முன்னணி ஊழியர்களுக்கான சிறப்புப் பேரவைக்கூட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது.

பேரவைக்கு சட்டமன்ற தொகுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். பேரவையில் கலந்துகொண்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச்சாமி, டி.சலோமி உள்ளிட்டோர் பேசினர்.

பேரவையில், கந்தர்வகோட்டை தொகுதிக்குள் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளை எப்படி தீர்த்து வைப்பது, சாதாரண ஏழை, எளிய மக்களளுக்கு அரசின் நலத்திட்டங்களை எப்படி கொண்டு செல்வது, சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி முறையாக கையாள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைள் விவாதிக்கப்பட்டன. பேரவையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்மும், சு.மதியழகன், ஒன்றிய செயலாளர்கள் எம்.வீரமுத்து, எம்.ஆர்.சுப்பையா, எஸ்.கலைச்செல்வன், ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் வரவேற்றார். தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் நன்றி கூறினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!