/* */

கந்தர்வகோட்டை: சில்லறை ரூபாயை போட்டு முதியவரிடம் ரூ. 1.40 லட்சம் திருட்டு

வங்கியிலிருந்து சைக்கிளில் வந்த முதியவரை திசை திருப்பி இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம பணத்தை திருடிச்சென்றனர்

HIGHLIGHTS

கந்தர்வகோட்டை: சில்லறை  ரூபாயை  போட்டு   முதியவரிடம்   ரூ. 1.40 லட்சம்   திருட்டு
X

கந்தர்வகோட்டை கடைவீதியில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீஸார்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ரகுபதி. இவர் கந்தர்வகோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள நிலையில் வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த 1.லட்சத்தி 40 ஆயிரம் ரூபாயை ரகுபதி, நேற்று வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் வங்கி அருகே சாலையில் பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு, முதியவர் ரகுபதியிடம் உங்களுடைய பணம் கீழே விழுகிறது என கூறி, அவரை திசை திருப்பியபின்னர், சைக்கிளில் வைத்திருந்த 1 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.

இதனை அறியாத முதியவர் ரகுபதி, கீழே கிடந்த நோட்டுகளை எடுத்துக் கொண்டு, மீண்டும் சைக்கிலருகே சென்று பார்த்த போது, தான் வைத்திருந்த 1 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் நடந்தவற்றை எடுத்துக் கூறி புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை அடுத்து சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை செய்த போலீசார் அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை இன்று சோதனை செய்து பார்த்தபோது சைக்கிளில் வந்த முதியவரை திசை திருப்பி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மர்ம நபர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து முதியவரிடம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 24 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்