/* */

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

அறிவியல், கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்க வானவில் மன்றம் உருவாக்கப் பட்டுள்ளது.

HIGHLIGHTS

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  வானவில் மன்றம் தொடக்கம்
X

வானவில் மன்றத்தின் மூலம் வேதியியல் எளிய பரிசோதனைகள், இயற்பியல் மற்றும் உயிரியல் எளிய பரிசோதனைகள் உள்ளிட்ட அறிவியல் சோதனைகளை அறிவியல் ஆசிரியர் ஆ.மணிகண்டன், கே.அய்யப்பன் ஆகியோர் செய்து காட்டினர்

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி வானவில் மன்றம் தொடங்கப்பட்டது.

நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு உறுப்பினர் நியூஸ் எம் ராஜேந்திரன் கலந்துகொண்டு தமிழக அரசு மாணவர்களுக் காக செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். மன்ற தொடக்க விழாவில் உதவி தலைமை ஆசிரியர் எஸ். தெய்வீகன் வரவேற்றார்.

வானவில் மன்றத்தின் மூலம் வேதியியல் எளிய பரிசோதனைகள், இயற்பியல் மற்றும் உயிரியல் எளிய பரிசோதனைகள் உள்ளிட்ட அறிவியல் சோதனைகளை அறிவியல் ஆசிரியர் ஆ.மணிகண்டன், கே.அய்யப்பன் ஆகியோர் செய்து காட்டினர்.

கணிதம் சார்ந்த சில செய்முறைகளை கணித ஆசிரியர்கள் ஓ சித்ராதேவி , எஸ்.அப்பாஸ்மந்திரி , கே.மும்தாஜ் பேகம் ஆகியோர் செய்து காட்டினர். இந்நிகழ்வை மாணவர்கள் ஆர்வத்துடடன் உன்னிப்பாகக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டனர்.

வானவில் மன்றம் நோக்கம் ... அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் 'வானவில் மன்றம்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் 2022-23-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வானவில் மன்றத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், காட்டூர் - பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார். மேலும் முதல்வர் ஸ்டாலின், அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

குழந்தைகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் நோக்கங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் "எங்கும் அறிவியல், யாவும் கணிதம்" என்பதாகும்.அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் இம்மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலையும் கணிதத்தையும் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கற்பித்தலில் இதுவரை அவர்கள் கையாண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்குவதற்கும், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவார்கள்.மேலும், அவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான (Experiments) கருவிகளை உடன் எடுத்து வருவார்கள்.

அரசுப் பள்ளிகள் தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து, ஆசிரியர்கள் துணையோடு மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பார்கள்.மேலும், ஆசிரியர்களுக்கு அறிவியல் மற்றும் கணித வல்லுநர்களுடன் இணைய வழி (டெலிகிராம்) கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் சக ஆசிரியர்களுடனான துறை சார்ந்த உரையாடலுக்கு வாய்ப்பு தருவதோடு, பிற ஆசிரியர்கள் அறிவியலையும் கணிதத்தையும் எவ்வாறு கற்றுத் தருகிறார்கள், மாணவர்களின் சந்தேகங்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று அறிந்து கொள்வதோடு, கற்பித்தல் முறைகளையும் பிறரிடம் இந்நிகழ்வின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.நவீன தொழிநுட்பங்களையும் கணிதம் சார்ந்த புதிய யுக்திகளையும் அறிந்து கொள்வதுடன், அவற்றை வகுப்புகளில் குழந்தைகளிடத்தில் பகிர்ந்து கொள்ளவும் இந்தக் கலந்துரையாடல் உதவும்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை. பகுத்தறிவைப் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் "வானவில் மன்றம்" அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு. கற்றல் இனிமையாகட்டும், கல்வி முழுமையாகட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Updated On: 29 Nov 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்