அரசு உயர்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், துவார் அரசு உயர்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் பொறுப்பு ரவீந்திரன் அனைவரும் வரவேற்றார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலர் (தொடக்கக் கல்வி) கோவிந்தன் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வரின் கனவு திட்டங்களில் ஒன்றான வானவில் மன்றம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒரு ஆண்டை நிறைவு செய்து, தற்போது இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நாம் இருக்கிறோம். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக்கூடிய வாய்ப்புகளை வானவில் மன்றம் வழங்கி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் வானவில் மன்ற செயல்பாடு களை உற்று நோக்கி கவனித்து சோதனைகளை செய்து வருவதன் மூலம் அறிவியல் மற்றும் கணிதத்தில் புதுமையான சிந்தனைகளை வளர்த்து வருவது பாராட்டத்தக்கது.
பகுத்தறிவுப் பார்வையோடு அறிவியலில் எதிர்காலத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பதற்கு வானவில் மன்றம் செயல்பாடுகள் உறுதுணையாக இருக்கும் என்றும், அறிவியல் மனப்பான்மை வளர்த்துக் கொண்டால் மூடநம்பிக்கை ஒழிந்துவிடும் என்றும், மீத்தேன் வாயு உருவாகும் விதம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார் .
நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவகந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாட்ட செயலாளரும், வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பங்கேற்று வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்தும், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் மீளாய்வு குறித்தும் பேசினார்.
வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்து வானவில் மன்ற செயல்பாடுகளை எவ்வாறு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu