கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு
அரியாணி பட்டி கிராமத்தில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது .
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அரியாணி பட்டி கிராமத்தில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது .
.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா தலைமை வகித்து பேசியதாவது மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ம் தேதி கொண்டாடப்படுகிறது, இது மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு மரியாதை அளிக்கவும் 1948 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம்
அனைவருக்கும் ஆரோக்கியம் இல்லாமல் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி இருக்க முடியாது. ஆரோக்கியத்திற்கான உரிமை என்பது அனைவருக்கும், எல்லா இடங்களிலும் மலிவு விலையில், தரமான மருத்துவ சேவையை அணுகுவதை உறுதி செய்வதாகும். இது பாலின சமத்துவம் மற்றும் உணவு, கல்வி, வீட்டுவசதி மற்றும் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் உள்ளிட்ட பிற மனித உரிமைகளை நிறைவேற்றுவதையும் சார்ந்துள்ளது என்று பேசினார். முன்னதாக இந்நிகழ்வினை தன்னார்வலர் ராதிகா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி மையம் தன்னார்வலர்கள் புவனேஸ்வரி, ஹேமா, மகேஸ்வரி, காயத்ரி ஆகியோர் உடனிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu