பாரதியார் பிறந்த நாளையொட்டி கொத்தகப்பட்டி நடுநிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது.
சுற்றுச்சூழல் இயற்கை, பள்ளி வளாகத்தில் அருகில் உள்ள சுற்றுப்புறங்கள் ,தோட்டம் ,பூங்கா, தாவரவியல் பூங்கா, வயல் காடு போன்றவற்றிற்கு இயற்கை நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், மாணவர்கள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு சைகை மொழியை பயன்படுத்த ஊக்குவித்தல்,
இலக்கியம், கவிதைகள், வாசித்தல், கதைகளை மாணவர்களைப் படிக்க சொல்லுதல் , சமையல் வகை பொருட்களை பயன்படுத்துதல், உங்கள் சுற்றுப்புறத்தை அறிந்து கொள்ளுதல், எனது பள்ளி மிளிரும் பள்ளி, விழுமியங்கள், எண் மற்றும் கணிதம், உங்கள் திறமையை காட்டுங்கள், எனது எண்ணங்களும் யோசனைகளும், வாசிப்பு மற்றும் செயல்பாடு உள்ளிட்ட 11 வகையான தலைப்புகளில் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமையல் வகைகள் என்ற தலைப்பில் மாணவர்கள் உள்ளூர் சிறுதானியங்களை சேகரித்து கம்பு, கேழ்வரகு, பாசிப்பயிறு உள்ளிட்ட நவதானியங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்களை தயாரித்தனர்.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம்தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா சிறப்பான செயல் ஈடுபட்ட மாணவர்களை பாராட்டினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கலைமணி, சுகன்யா, தற்காலிக ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu