வளர்ச்சி திட்டப் பணிகள்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகள்: புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் - மானாமதுரை சாலை முதல் புதுராசாப்பட்டி சாலை வரை ரூ.25.65 இலட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணியை ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை திருக்கட்டளை சாலையில் நகராட்சி குப்பை கிடங்கில், Bio Mining முறையில் தரம் பிரித்தலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் புதுக்கோட்டை ஒன்றியம், முள்ளூரில் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பெரம்பலூர் - மானாமதுரை சாலை முதல் புதுராசாப்பட்டி சாலை வரை ரூ.25.65 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணியினையும் மற்றும் புதுக்கோட்டை வட்டம், சம்பட்டி விடுதி கிராமம், கம்மங்காடு அணைக்கட்டிலிருந்து பூண்டிக்குளம் கண்மாயிக்கு செல்லும் வலதுபுற வழங்கு வாய்க்கால் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்குதல், அலுவலக செயல்பாடுகள் குறித்தும், கணினியில் பதிவேற்றும் முறை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பதிவேடுகள், அலுவலக செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்து, சிகிச்சை கருவிகளையும் பார்வையிட்டார். மேலும் மருத்துவர்கள், செவிலியர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் பூண்டிக்குளம் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினையும், மட்டாங்கால் கிராமத்தில் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணியினையும், புதுப்பட்டி ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகள் பழுது பார்க்கும் பணிகளையும், அங்கு செயல்பட்டு வரும் நூலகத்தினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வுகளில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கந்தர்வக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் (எ) இரா.ரெத்தினவேல், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) கனிமொழி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், நகராட்சி ஆணையாளர்(பொ) பாலாஜி, உதவி பொறியாளர் கல்யாணகுமார், வட்டாட்சியர் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலு, ரவிச்சந்திரன், நளினி, திலகவதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!