கந்தர்வகோட்டையில் தாசில்தார் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்

கந்தர்வகோட்டையில் தாசில்தார் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

கந்தர்வகோட்டை தர்கா அருகில் உள்ள முஸ்லிம் தெருவில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள்.

கந்தர்வகோட்டை தர்கா அருகில் நடைபெற்ற முகாமில் மக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தர்கா அருகில் உள்ள முஸ்லிம் தெருவில் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு கந்தர்வகோட்டை தாசில்தார் புவியரசன் தலைமை வகித்தார்.

கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் கந்தகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் தெருவில் நடந்த இந்த தடுப்பூசி போடும் முகாமில் 70க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவரால் உடல் வெப்பம், ரத்த அழுத்தம் போன்றவைகள் பரிசோதனை செய்த பின்னரே தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தடுப்பூசி முகாமில் முஸ்லிம் தெருவில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture