தொகுதி மேம்பாட்டு பணிகள்: எம்எல்ஏ தொடக்கம்

தொகுதி மேம்பாட்டு பணிகள்: எம்எல்ஏ தொடக்கம்
X

தொகுதி மேம்பாட்டு நிதியில் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை  அடிக்கல் நாட்டினார்.

கந்தர்வக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு திட்டப் பணிகளை எம்எல்ஏ சின்னதுரை தொடக்கி வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு திட்டப் பணிகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடக்கி வைத்தார்.

கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வளவம்பட்டி ஊராட்சியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட அரவம்பட்டி ஊராட்சியில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம், கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை, கந்தர்வகோட்டை அரசு போக்குவரத்துப் பணிமனையில் ரூ. 5.55 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

மேலும், கந்தர்வக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.

மேற்படி நிகழ்வுகளில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையுடன் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் ஆர்.இளங்கோவன், கிளை மேலாளர் தாமோதரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆ.பரமசிவம், மா.தமிழ்அய்யா, கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் (எ) ரெத்தினவேல். சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் வெ.ரெத்தினவேல். க.சித்ரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business