பகுதி நேர அங்காடியை எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பகுதி நேர அங்காடியை எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
X

 கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை கிராமத்தில் பகுதிநேர அங்காடியை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை கிராமத்தில் பகுதி நேர அங்காடியை சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பகுதி நேர அங்காடியை எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை கிராமத்தில் பகுதிநேர அங்காடியை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டை கிராமத்தில் பகுதிநேர அங்காடி திறக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாளையக் கோரிக்கையாக இருந்துவந்தர். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.சின்னதுரை, தான் வெற்றிபெற்றால் பகுதிநேர அங்காடி திறக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மஞ்சப்பேட்டையில் பகுதிநேர அங்காடி திறக்கப்பட்டது. அங்காடியை திறந்து வைத்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.இந்நிகழ்வில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், திமுக ஒன்றியச் செயலளார் மா.தமிழய்யா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.சித்திரைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளி வகுப்பறைகளுக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நபார்டு திட்டத்தின்கீழ் ரூபாய் 148.26 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடம் கட்டுவதற்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவர் பாண்டிச்செல்வி போஸ், மாவட்டக் கவுன்சிலர் செல்வம், பேரூராட்சித் தலைவர் ஜெயமீரா, திமுக ஒன்றியச் செயலாளர்கள் வெங்கடாசலம், சண்முகம், சேட், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் கலைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!