துளிர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

துளிர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
X

ஆண்டிகுளப்பம்பட்டி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆண்டிகுளப்பம்பட்டி பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

ஆண்டிகுளப்பம்பட்டி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், ஆண்டி குளப்பம் பட்டி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஞானசேகர் அகஸ்டின் தலைமை வகித்தார.ஆசிரியர் தேவ ஆரோக்கிய நாதன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி பிரேமா முன்னிலை வகித்தார்.புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் சசிகலா டாக்டர் இராதாகிருஷ்ணன் புகைப்படம் வழங்கினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரத் தலைவர் ரகமதுல்லா துளிர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசிய போது:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வில் நம் பள்ளியின் சார்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். துளிர் திறனறிவுத் தேர்வு எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளுக்கு முன்னோடி தேர்வாக இருக்கும் அனைத்து மாணவர்களும் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.துளிர் வினாடிகள் போட்டிகள் நடத்தப்படுகிறது.

மாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாத இதழான விஞ்ஞான துளிர், அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கு விஞ்ஞான சிறகு , ஆங்கில இரு மாத இதழான ஜந்தர் ,மந்தர் உள்ளிட்ட இதழ்களை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியீடுகளையும் மாணவர்கள் வாசிக்க வேண்டும்.மூடநம்பிக்கைகளை ஒழிக்க விதமாக நிகழ்வுகளையும் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது என்று பேசினார். சிறப்பாசிரியர் அறிவழகன் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக துளிர் திறனறிவுத் தேர்வில் சிறப்பு நிலைப்பெற்ற ஹரிபிரகாஷ், அனுஸ்ரீ, ஆர்த்திக், அன்புச்செல்வன், அமுதன் உள்ளிட்ட மாணவர்களுக்கு துளிர் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் மஞ்சுளா,செல்வமணி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் கோமதி நன்றி கூறினார்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா