வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்
X
புதுக்கோட்டையில்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உட்கோட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணா நகரில் இன்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது என கீரனூர் காவல் ஆய்வாளர் ராமலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

அதன்படி அப்பகுதியில் உள்ள அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட பொழுது கலியபெருமாள் என்பவர் வீட்டை சோதனை செய்ததில் அவர் வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2692 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு சுமார் 4 லட்ச ரூபாய் என தெரிய வருகிறது

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த கலியபெருமாள் சக்திவேல் ,ஆறுமுகம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்ந்து தமிழக அரசு 10 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு மதுபான கடைகள் இயங்காது என அறிவிப்பு வெளியிட்டிருந்தது தொடர்ந்து அரசு மதுபான கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற மது பிரியர்கள் தற்பொழுது மதுபானங்கள் கிடைக்காததால் அதை கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு