/* */

கேரள மக்களே இனி அரிசிக்கொம்பனைப் பற்றி கவலைப்படாதீர்கள்..!

தமிழ்நாட்டுக்கு எதிராக வழக்கு தொடுப்பது என்றால் கேரளாவைச் சேர்ந்த என்ஜிஓ சகோதரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல உள்ளது

HIGHLIGHTS

கேரள மக்களே இனி அரிசிக்கொம்பனைப் பற்றி    கவலைப்படாதீர்கள்..!
X

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனத்திற்குள் உலவும் அரிசிக் கொம்பன். சற்று உற்றுப்பாருங்கள் நன்றாக தெரியும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையாக இருக்கட்டும். இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம் சட்டமன்ற தொகுதியின் வரம்பு நிலையை மாற்றுவது குறித்தான பிரச்னையாகட்டும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் கேரளாவில் உள்ள ஏதோ ஒரு என் ஜி ஓ அமைப்பை சேர்ந்தவர்கள் தான் வழக்கு தொடுக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து போராடுவதும், வழக்கு தொடுப்பதுமாக இருப்பவர்களை கீழே பட்டியலில் பார்க்கலாம். சி.ஏ.குரியன், பாதர் ஜோ நிரப்பல், ஜோன்ஸ் பெருவந்தானம், பாதர் ஜெபாஸ்டியன், டாக்டர் ஜோ ஜோசப், பி.ஜே. ஜோசப், அட்வகேட் ரசல் ஜோய், ரோஸி அகஸ்டின், ஏலப்பாறை பிஜுமோள் என அனைவரும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக நிற்பவர்கள்.

இப்போது அரிசி கொம்பனுக்கு எதிராக களத்தில் நிற்பதும் ரெபேக்கா ஜோசப் என்கிற என் ஜி ஓ தான். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிசி கொம்பன் யானை உண்பதற்கும், குடிப்பதற்கும் உணவும் தண்ணீரும் இல்லையாம். அதனால் அரிசி கொம்பனை மதிகெட்டாஞ்சோலை தேசிய பூங்காவிற்கு மாற்ற வேண்டுமாம். சொல்வது யார் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப். எர்ணாகுளத்திற்கும் மதிகெட்டான் சோலைக்கும் என்ன சம்பந்தம். மேலாக மதிகெட்டான்சோலை தேசிய பூங்கா அமைந்திருக்கும் சாந்தம்பாறை பஞ்சாயத்து தலைவர் லிஜி வர்கீஸ் தான் அரிசிகொம்பனை சின்னக்கானலில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர். யானை சின்னக்கானலில் இருக்கும் போது, இல்லாத அக்கறை இந்த ஜோசப்பிற்கு எங்கே இருந்து வந்தது. உள்ளபடியே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிசி கொம்பன் யானை விடப்பட்டிருக்கும் முத்துக்குளி வயல் பகுதி, சோலைக்காடுகளும், நீரூற்றுகளும் நிறைந்த பகுதி. தமிழகத்திலுள்ள வளமிக்க பகுதிகளில் முதன்மையான பகுதி இது. இன்னும் சொல்லப்போனால் பிரிட்டிஷ்காரர்களே இதனுடைய வளத்தை கண்டு வியந்த பகுதி.

அந்த வனப்பகுதியில் தண்ணீர் இல்லை என்று இந்த ஜோசப் சொல்வதற்கு பின்னணி என்ன என்பது குறித்து நீதிமன்றம் விசாரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த ஜோசப்பிற்கு மதிகெட்டான் சோலை ஒரு வறண்ட பகுதி என்பது தெரியுமா.. தெரியாதா என தெரியவில்லை. அந்த வறண்ட பகுதியில் யானையை விட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அது தன்னுடைய பழைய இருப்பிடமான சின்னக்கானலை அடையும். ஒரு வனப் பகுதியின் வளம், வனவிலங்குகள் அங்கு வாழ்வதற்கு உண்டான தகுதி, பெய்யும் மழை அளவு, காலநிலை சீதோஷ்னம், காடுகளின் பரப்பு என பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அரசும், தமிழக வனத்துறையும் யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கொண்டு விட்டிருக்கிறது.

அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அரிசி கொம்பன் நலமுடன் இருப்பதை விரும்பாத இந்த ஜோசப் போன்ற குக்கர்கள் சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டிற்கு வந்து வழக்கு போடுவதும், அரிசி கொம்பன் யானை மீது அக்கறை இருப்பது போல் நடிப்பதும் ஏற்புடைய செயல் அல்ல. இந்த ரெபேக்கா ஜோசப்பை முத்துக்குளி வயல் பகுதியில் ஒரு பத்து நாள் தனியே நடமாட விட்டால், அரிசி கொம்பன் மீது அவர் இன்னும் கூடுதல் காதல் கொள்ள ஏதுவாக இருக்கும்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறுகையில், ‘தமிழக முதலமைச்சரிடம் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜோசப் தயார் என்றால் களக்காடு முண்டந்துறைக்கு நாங்களே அழைத்துச் சென்று அரிசி கொம்பனுடன் ஜோசப்பை சேர்க்கத் தயார். அரிசிக் கொம்பனை பற்றி கவலைப்படும் அவர், அங்கு தங்கியிருந்து அரிசிக் கொம்பனை பராமரிக்கட்டும். அதற்கு தேவையான உதவிகளையும் தமிழக வனத்துறை மூலம் செய்து தர தயாராக இருக்கிறோம். ஜோசப் தாராளமாக வரலாம்... களக்காடு முண்டந்துறைக்கு... அரிசிக் கொம்பனின் வாழ்கைக்கு உதவி செய்யலாம் என்று கூறியுள்ளார்.

Updated On: 20 Jun 2023 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் அடிக்கடி முகம் கழுவுபவரா நீங்க...?
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையாரை தரிசனம் செய்த அண்ணாமலை
  3. விளையாட்டு
    இந்தியா - வங்கதேசம் லைவ் மேட்ச் எங்க பாக்கலாம்?
  4. விளையாட்டு
    இந்தியா - வங்கதேசம் டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்..!
  5. வீடியோ
    Garudan படத்தில செம்ம Goosebumps சீன்ஸ் இருக்கு !! #soori #hero ...
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டியில் ஆன்மீக பயிற்சி வகுப்பு
  7. வீடியோ
    Soori சார் செம்மையை பண்ணியிருக்காரு !! #soori #hero #garudanmovie...
  8. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறீங்களா..? இதை படீங்க..!
  9. வீடியோ
    🔴LIVE : குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர்...
  10. நாமக்கல்
    சாலை விபத்தில் காயமடைந்தவர் குணமடைந்து ஆட்சியருக்கு நன்றி