கிரிக்கெட் விளையாடி ஓட்டு சேகரித்த எல்.முருகன்!
நீலகிரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் 'எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் திமுகவினருக்கு கவனம் இருக்கும்' என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் எல்.முருகன் பேசியதாவது: சமூகநீதி பற்றி பேசுவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாண்டு காலமாக நமது மக்களின் நம்பிக்கைக்குரிய கடவுளான, ஹெத்தையி அம்மன் கோவிலுக்கு வருகை தராத ஊழல் ராசா, இப்போது தேர்தல் வந்ததும் தேடிச் சென்று வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழை வைத்து திமுகவினர் அரசியல் லாபம் தேடி வருகின்றனர். எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் திமுகவினருக்கு கவனம் இருக்கும். தமிழக முதல்வர் தமிழ் மீது அக்கறை உள்ளவர் போல போலியாக வேஷம் போட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் உண்மையிலேயே தமிழை போற்றுவது பிரதமர் மோடி மட்டும் தான். சர்வதேச அளவில் 35 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி இன்றைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் தமிழரின் பண்பாட்டை பேசி வருகிறார். தி.மு.க, எம்.பி ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மெத்தனமாக சோதனை செய்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியினர் என்று பாகுபாடு பாராமல் செயல்பட வேண்டும். தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மஞ்சூர் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற போது அங்குள்ள இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடினார். தக்கர் பாபா நகர் செல்லும் வழியில் பூண்டு தோட்டத்தில் வேலை செய்து வந்த அப்பகுதி பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu