உதகை அருகே கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானைக் கூட்டம்

உதகை அருகே கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானைக் கூட்டம்
X

கிராம பகுதிகளில் சுற்றும் காட்டு யானை கூட்டம். 

உதகை அருகே தூதூர் மட்டம் அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் மக்கள் அச்சம்.

உதகை அருகே உள்ள மஞ்சகொம்பை மணலாடா பகுதியில் தேயிலை தோட்டத்தில் உலாவரும் காட்டுயானை கூட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் 4 காட்டு யானைகள் உலா வருவதால் பணிக்கு செல்லும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் யானையை நடமாட்டத்தை கண்காணிக்கும் வனத்துறை பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் நடமாடும் தேயிலைத் தோட்டங்களில் பணியாளர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினர் யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!