உதகை குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் செந்நாய் கூட்டம் - மக்கள் பீதி

உதகை குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் செந்நாய் கூட்டம் - மக்கள் பீதி
X

உதகையில்,  அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உலா வந்த பத்துக்கும் மேற்பட்ட செந்நாய்கள்.

உதகையில், வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் செந்நாய் கூட்டமாக உலா வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள எச்.பி.எஃப் பகுதியில், தபால் அலுவலகம், ரேஷன் கடை, அரசு பள்ளி, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வன விலங்குகளின் நடமாட்டமும் காணப்படும்.

இந்நிலையில், இப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட செந்நாய் கூட்டம் உலா வந்ததால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர். இன்று அதிகாலை, செந்நாய்கள் திரிந்து கொண்டிருந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மேலும் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்தனர். வனத்துறை செந்நாய் கூட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil