உதகை நகரில் உலா வந்த காட்டெருமை கூட்டம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்.

உதகை நகரில் உலா வந்த காட்டெருமை கூட்டம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்.
X

ஊருக்குள் உலா வந்த காட்டெருமை கூட்டம்

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே காட்டெருமைக் கூட்டம் உலாவந்ததால் நடை பயிற்சி மேற்கொண்ட மக்கள் ஒட்டம்பிடித்தனர்.

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை வேளையில் காட்டெருமை கூட்டம் உலா வருகிறது இந்நிலையில் இன்று மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மரவியல் பூங்கா, மான் பூங்கா, சாலையில் 20க்கும் மேற்பட்ட காட்டு எருமை கூட்டம் உலா வந்தது. அப்போது அச்சாலை வழியே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் சாலையில் அங்கும் இங்கும் உலா வந்த காட்டெருமை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. மேலும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் அச்சத்துடன் காட்டெருமை கூட்டத்தைக் கடந்து சென்றனர். சாலையில் உலா வரும் காட்டெருமை கூட்டத்தைக் கண்டால் கற்களை வீசி எறிவதும், கூச்சலிட்டு துரத்தவும் கூடாது என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!