உதகையில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் - போலீசார் எச்சரிக்கை

உதகையில் அதிகாலை முதலே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஆட்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனங்களை எச்சரித்து விடுவித்தனர்.

நீலகிரி மாவட்டம், உதகை நகரில், இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மற்ற வாகனங்களுக்கு அனுமதியில்லை.

இந்நிலையில், உதகை நகரில் தேவையின்றி சுற்றும் வாகனங்களை, இன்று அதிகாலை முதலே போலீசார் கண்காணித்தனர். அப்போது, அனுமதியின்றி பிக்கப் வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை போலீசார் சிறைபிடித்தனர்.

மேலும் வாகனத்தில் பிடிபட்டவர்கள் எந்த தேவைகளுக்காக வெளியே செல்கிறார்கள் என கேட்டு அறிந்த போக்குவரத்து காவலர்கள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென கூறியதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!