உதகையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் பழங்குடியினர்!
விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர்
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் பழங்குடியின மக்களான தோடர், கோத்தர், குறும்பர் , பணியர், இருளர், காட்டு நாயக்கர், உள்ளிட்டோர் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
உதகை பகுதியில் பெரும்பாலான தோடர் இன மக்கள் மந்து எனப்படும் கிராமங்களில் அதிகமாக உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கொரனோ இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தோடர் இன மக்கள் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்களது மொழியிலேயே கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
கொரோனாவிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க சமூக இடைவெளியை பின்பற்றவும் கட்டாயம் முகக்கவசம் அணியவும் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை சோப்பினால் கைகளை சுத்தப்படுத்தவும் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுபற்றி தோடர் இன சிறுமி கூறுகையில், தாங்கள் வசிக்கும் பகுதியில் மாவட்ட நிர்வாகம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தங்களது பெற்றோர்களும் எவ்வாறு தொற்று பரவாமல் இருக்க என்னென்ன கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியது தங்களுக்கு உதவியாக இருந்தது என கூறியதோடு தாங்களும் மிகவும் கவனத்துடன் இப்பகுதியில் உள்ளதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu