நீலகிரியில் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி புறப்பட்ட ஜனாதிபதி

நீலகிரியில் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி புறப்பட்ட ஜனாதிபதி
X

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்ற கார்.

உதகையில் இருந்து கோத்தகிரி சாலை வழியாக கோவை விமான நிலையம் செல்வதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனி ஹெலிகாப்டர் மூலம் 4 நாள் சுற்றுப்பயணமாக 3ம் தேதி உதகைக்கு வந்தார். கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிக்கப்டர் தளத்திற்கு வந்தடைந்து வாகனம் மூலம் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் குடியரசு தலைவர் தங்கியிருந்தார்,

நான்காம் தேதி குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட குடியரசுத்தலைவர், நேற்று ராஜ்பவனில் ஓய்விற்குப் பின், இன்று காலை உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் புறப்பட்டார்.

முன்னதாக தனி ஹெலிகாப்டர் மூலம் காலை 10.30 மணிக்கு கோவை விமான நிலையம் புறப்படுவதாக இருந்த நிகழ்வு, அதிக மேகமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. உதகையில் இருந்து கோத்தகிரி சாலை வழியாக கோவை விமான நிலையம் செல்வதை தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு காவல் துறையினர் உள்ளிட்ட 1300கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!