நீலகிரியில் ஜனவரி 15, I 8, 26 ஆகிய தேதிகளில் மதுக்கடை, பார் மூடல்

நீலகிரியில் ஜனவரி 15, I 8, 26 ஆகிய தேதிகளில் மதுக்கடை, பார் மூடல்
X

 கலெக்டர் அம்ரித்

டாஸ்மாக் கடை திறப்பு குறித்து, பொதுமக்கள் 0423-2223802 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி திருவள்ளுவர் தினம், 18-ந் தேதி வள்ளலார் நினைவு நாள், 26-ந் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்கள் தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் படி டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது.

மேற்கண்ட நாட்களில், கட்டாயம் டாஸ்மாக் சில்லறை விற்பனைக்கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை 0423-2223802 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி