நீலகிரில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானியம்: கலெக்டர் தகவல்
நீலகிரி மாவட்ட கலெக்டர் (பைல் படம்)
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள்,மலைப்பயிர்கள், நறுமணப் பயிர்கள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டும், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் ஏற்படும் செலவினங்களை குறைத்து லாபத்தினை அதிகரிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் 2021-22-ம் ஆண்டில் தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்திட்டத்தின் கீழ் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தற்பொழுது தோட்டக்கலைப் பயிர்களின்பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் பரப்பு விரிவாக்கம் இனத்தின்கீழ் பல்லாண்டு நறுமணப்பயிரான மிளகு, ஜாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய ஒரு எக்டருக்கு ரூ.20000 வீதம்வீதம் 125 எக்டருக்கு மானியம் வழங்க நீலகிரி மாவட்டத்திற்கு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மிளகு, ஜாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், உதகை (8489604087), குன்னூர் (6381963018), கோத்தகிரி(9994749166) மற்றும் கூடலூர் (8903447744) என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தினை அளித்தும் உழவன் செயலியில் பெயரினை முன்பதிவு செய்தும் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu