நீலகிரியில் விவசாயிகளுக்கு மானியம்

நீலகிரியில் விவசாயிகளுக்கு மானியம்
X
-கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தகவல்

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளின் நலன்கருதி பல்வேறு வகையான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இது குறித்து கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது :

இதில் முதன்மையான திட்டம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம். நீர் ஆதாரம் மற்றும் மழைப்பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் சிறு/ குறுவிவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் அமைத்திட100% மானியமும் பெரு விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படும்.

பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க்கிணறு/ துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகை யில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25,000/. டீசல் பம்பு செட்/ மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்குஅதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15,000/-த்திற்குமிகாமலும். வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டுசெல்லும் வகையில் நீர்பாசன குழாய் அமைப்பதற்கு 50சதவீத மானியத் தொகை எக்டருக்கு ரூ.10,000/-க்கு மிகாமலும். பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த் தேக்கத்தொட்டி நிறுவுவதற்கு அதற்காகும் செலவில் 50 சதவீதத்தொகை ஒரு கன மீட்டருக்கு ரூ.350/-க்கு மிகாமலும் நிதிஉதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000/-க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படும் விவசாயிகளுக்கு இப்பணிகளுக்கான மானியம் நுண்ணீர்பாசனம் அமைத்து மானியத் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட பின் இத்துணை நீர் மேலாண்மைக்கான மானியத் தொகை முழுவதும் விவசாயிகளின் சேமிப்பு கணக்கிற்கு நேரிடையாக விடுவிக்கப்படும்.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெறும் விரும்பும் விவசாயிகள் முக்கிய ஆவணங்களான குடும்ப அட்டைநகல், அடங்கல், கணினி சிட்டா, நிலவரை படம், சிறு/ குறுவிவசாயிகளாக இருப்பின் அதற்கான வட்டாச்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, உழவன் செயலி மற்றும் செயலில் பதிவு செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட பணிகளுக்கான மானியம் பெறுவதற்கு விவசாயிகள் தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலகத்தை அல்லது கீழ்குறிப்பிட்டுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பெயரினை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 1.தோட்டக்கலை உதவிஇயக்குநர், உதகை- 8489604087,

2. தோட்டக்கலைஉதவிஇயக்குநர், குன்னூர்- 6381963018,

3.தோட்டக்கலைஉதவி இயக்குநர், கோத்தகிரி- 9486412544,

4.தோட்டக்கலை உதவி இயக்குநர், கூடலூர்- 8903447744 இவ்வாறு கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்