உதகையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடைக்கு சீல்

உதகையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடைக்கு சீல்
X

தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடையை மூடி  சீல் வைத்த அதிகாரிகள்.

உதகையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று உதகை நகராட்சி சுகாதார அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உதகை காந்தல் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

ஒரு கடையில் தடை செய்த பிளாஸ்டிக் டம்ளர்கள், கவர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது தெரியவந்தது. பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடையை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!