உதகையில் மான்களை வேட்டையாடிய செந்நாய்கள்: பொதுமக்கள் அச்சம்

உதகையில் மான்களை வேட்டையாடிய செந்நாய்கள்: பொதுமக்கள் அச்சம்
X

மான்களை வேட்டையாடும் செந்நாய்கள் கூட்டம்.

உதகை குடியிருப்பு பகுதியில் அதிகாலை வேளையில் கடா மான்களை செந்நாய்கள் வேட்டையாடியதால் பொதுமக்கள் அச்சம்.

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள நகரப் பகுதிகள் பெரும்பாலும் வனத்தை ஒட்டியே உள்ளது. உதகையில் இருந்து தலைகுந்தா பகுதிக்கு செல்லக்கூடிய சாலையில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. சமீபகாலமாக இந்த குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் அடிக்கடி செந்நாய்கள் கூட்டம் உலா வருவதை கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் பகல் நேரங்களிலேயே செந்நாய்கள் உலா வருவதால் மக்கள் வெளியே செல்ல அச்சமடைந்து வந்தனர்.

இந்நிலையில் குடியிருப்பை ஒட்டி உள்ள நீர் நிலையில் தண்ணீர் குடிக்க வந்த கடா மான்களை 10 க்கும் மேற்பட்ட செந்நாய் கூட்டங்கள் சூழ்ந்து வேட்டையாடியது. மூன்று மான்கள் தண்ணீரில் தத்தளித்து. இரு மான்கள் வெளியே சென்றவுடன் குட்டி மானை செந்நாய்கள் வேட்டையாடியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது அப்பகுதி குடியிருப்புவாசிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!