உதகையில் கால்வாயில் விழுந்த பசு மீட்பு

உதகையில் கால்வாயில் விழுந்த பசு மீட்பு
X

கால்வாயில் தவறி விழுந்த பசு.

உதகையிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் மூடப்படாமலிருக்கும் கால்வாயில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

ஊட்டி-குன்னூர் சாலை நொண்டிமேடு சத்துணவு மைய பகுதியில் மழைநீர் செல்லும் வகையில் குழிதோண்டி கான்கீரிட் போடப்பட்டு உள்ளது. இந்த சிறிய கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நள்ளிரவில் அந்த வழியாக நடந்து சென்ற பசு ஒன்று தவறி கால்வாய்க்குள் விழுந்தது.

வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஊட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பசுமாட்டை வெளியே தூக்கி மீட்டனர். இதனையடுத்து மாட்டின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்