உதகையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு

உதகை நகராட்சி 36 வார்டுகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு பா.ஜ.க. சார்பில் நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

பாஜகவின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, ஒரு வாரத்திற்கு சேவை வாரமாக கடைபிடிக்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், கொரோனோவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த அனைவருக்கும் உணவு, காய்கறிகள், மளிகை தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

உதகை நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் 200 க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மளிகை தொகுப்பு மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் கூறும்போது பேரிடர் காலங்களில் தங்களின் உயிரை பணையம் வைத்து பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இந்த நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன தொடர்ந்து மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஊரடங்கு காலம் முடியும் வரை நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகி போஜராஜன், மாவட்ட பொருளாளர் தருமன், உதகை நகர தலைவர் ப்ரவீன், நகர செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்