உதகையில் தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம். விரைவுபடுத்த மக்கள் வேண்டுகோள்

உதகையில் தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம்.  விரைவுபடுத்த மக்கள் வேண்டுகோள்
X

உதகையில் தடுப்பூசி செலுத்த காத்திருக்கும் மக்கள்

உதகையில் தடுப்பூசி செலுத்த அதிகாலை முதலே குவிந்ததால் விரைவாக தடுப்பு ஊசியை செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

கொரோனோ இரண்டாம் அலை தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு முடுக்கி விட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசியை செலுத்தும் முகாமை நடத்தி வருகிறது.

இதில் உதகை நகரில் இன்று தனியார் பள்ளியில் சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன அதிகாலை 7 மணி முதலே பொது மக்கள் குவிந்தனர். அதிகாலையில் குவிந்த பொதுமக்கள் மதியம் வரை காத்திருந்து ஊசி செலுத்த சென்றனர்.

ஒருசிலர் கூறும்போது அதிகாலை உணவு உண்ட பின்பு மதியம் வரை உணவு இல்லாததால் தடுப்பு ஊசி செலுத்தி மீண்டும் உடல் உபாதைகள் ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், ஊசி செலுத்துவோர் மருத்துவ குழுவை அதிகப்படுத்தி பொது மக்களுக்கு விரைவாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தடுப்பூசி செலுத்த வந்த பொது மக்களில் ஒரு சிலர் மதிய உணவை அங்கேயே உண்டனர். உணவு இல்லாதோர் ஊசியை செலுத்த அச்சமாக உள்ளதென தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil