மாற்றுத்திறனாளிகளுக்கு சம பணி வழங்க வேண்டும்: தொழிலாளர் உதவி ஆணையர்
நீலகிரி மாவட்டத்தில் 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கைகளை மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி உருவாக்க வேண்டும் என்றார் குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்: அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கைகளை மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி உருவாக்கஅவர்களுக்கான பணியிடங்களை கண்டறிந்து குறைந்தது 5 சதவீத பணிவாய்ப்பு மற்றும் நியமனம் வழங்க வேண்டும். 20 பேருக்கு மேல் பணியாளர்களை பணியமர்த்திய அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள கூகுள் சீட் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
தொழிலாளர் உதவி ஆய்வர்கள் ஆய்வின்போது மாற்றுத்திறனாளிகள் நிறுவனங்களை அணுகுவதற்கான சாய்வு தளம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் ஆய்வறிக்கையை பூர்த்தி செய்து நிறுவனத்துக்கு வழங்கும் ஆய்வு உத்தரவில் தெரியப்படுத்த வேண்டும்.
அதிக மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை கண்டறிந்து, அவர்களை பணியமர்த்திய நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu