கோடநாடு வழக்கில் ஆஜரான இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோடநாடு வழக்கில் ஆஜரான இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
X
தனிப்படை போலீசார் முன் ஆஜரான 8ம் நபர் சந்தோஷ் சாமி, 9ம் நபர் மனோஜ்சாமி.
கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் உதகையில் உள்ள பழைய எஸ்.பி., அலுவலகத்தில் தனிப்படை போலீசார் முன் ஆஜராகினர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இருவரிடம் விசாரணை முடிந்த நிலையில், இன்று 8ம் நபர் சந்தோஷ் சாமி, 9ம் நபர் மனோஜ்சாமி ஆகியோர் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் முன் ஆஜராகினர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையில் 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் நபரான சயான் மற்றும் 4 நபர் ஜம்சீர் அலியிடம் ஏற்கனவே விசாரணை நடந்து முடிந்த நிலையில் எட்டாம் நபராக உள்ள சந்தோஷ்சாமி ஒன்பதாம் நபராக உள்ள மனோஜ்சாமிக்கு போலீசார் கடந்த வாரம் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று எதிரொலியாக அவர்கள் இருவரும் ஆஜர் ஆகவில்லை.

இதையடுத்து இவர்கள் இருவரும் இன்று ஆஜராக உத்தரவிட்டதைடுத்து சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகிய இருவரும் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், ஜம் சீர் அலி ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடந்து முடிந்த நிலையில் இன்று மீண்டும் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகிய இருவரிடம் தனிப்படை போலீசார் மற்றும் மாவட்ட எஸ்.பி., ஆஷிஸ் ராவத் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!