ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஊட்டி வருகை; பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஊட்டி வருகை; பாதுகாப்பு பணிகள் தீவிரம்
X

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

ஜனாதிபதியின் ஊட்டி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த மாதம் 3 ம் தேதி ஊட்டி வருகிறார்.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜ்பவனில் தங்குகிறார். 4 ம் தேதி குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

5 ம் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட உள்ளார். இதற்காக, மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி தீட்டுக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் அவர் தங்கவுள்ள ராஜ்பவன் மாளிகை சீரமைக்கப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!