தபால் ஓட்டுக்கள் பெற 18 குழுக்கள் நியமனம்

தபால் ஓட்டுக்கள் பெற 18 குழுக்கள் நியமனம்
X

நீலகிரியில், தபால் ஓட்டுகள் பெற, 18 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. என, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில் தேர்தலையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில், ஓட்டுசாவடி நிலைய அலுவலர்களை குலுக்கல் முறையில் சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஒதுக்கீடு பணிகளை பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில், ' மூன்று தொகுதிகளில், 868 ஓட்டு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 4168 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

20 சதவீதம் பேர் ரிசர்வ் பணியில் உள்ளனர். 26 ம் தேதி இரண்டாவது பயிற்சி நடக்கிறது.80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் ஓட்டு போடலாம். அதன்படி, 12,700 தபால் ஓட்டுக்களில், 1736 பேர் தபால் ஓட்டு போட, 12 டி படிவம் வாங்கியுள்ளனர்.அந்தந்த பகுதியில் தபால் ஓட்டுகள் பெறப்பட்டு வருகிறது. இதற்காக, மூன்று தொகுதிகளில், 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!