உதகையில் காட்டெருமையை தாக்கிய நபர் கைது

உதகையில் காட்டெருமையை தாக்கிய நபர் கைது
X
காட்டெருமையை தாக்கும் நபர்.
காட்டெருமையை தாக்கிய நபர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊட்டி அருகே கேத்தி பகுதியில் காலில் காயத்துடன் காட்டெருமை ஒன்று நடமாடி வருகிறது. இந்த காட்டெருமை குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கேத்தியில் சேலாஸ் செல்லும் சாலையில் ஒற்றை காட்டெருமை காயத்துடன் நடமாடியது.

இதை பார்த்த ஒரு நபர் ஆத்திரமடைந்து கம்பால் காட்டெருமையை தாக்கி உள்ளார். இதனால் காட்டெருமை திரும்பி சாலை வழியாக ஓடி வனப்பகுதிக்குள் சென்றது. அங்கிருந்த மக்கள் அந்த நபரிடம் காட்டெருமையை தாக்கக் கூடாது, ஏற்கனவே காயத்துடன் சுற்றுத்திரிகிறது என்று தெரிவித்தும் அந்த நபர் காட்டெருமையை தாக்கினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காட்டெருமையை தாக்கிய நபர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் காட்டெருமையை தாக்கிய நவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்