கொரோனா தொற்று: உதகை உழவர் சந்தை இடமாற்றமா?

நோய் தடுப்பு நடவடிக்கையாக உதகையில் உள்ள உழவர் சந்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை, மாவட்டநிர்வாகம் கைவிடப்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், அரசு விதித்துள்ள வழி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில் உதகையில் உள்ள உழவர் சந்தை இட மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. நாள்தோறும் உழவர்சந்தை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டு வருகிறது இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகமானது ஏ.டி.சி பேருந்து நிலையம் அருகே உள்ள சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உழவர் சந்தையை மாற்ற அறிவுறுத்தியது.

ஆனால், இதற்கு உழவர் சந்தை வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில் மைதானம் தற்போது பாதுகாப்பான முறையில் இல்லாத நிலை உள்ளதால், மாவட்ட நிர்வாகமானது இடமாற்றத்தை செய்யாமல் உழவர் சந்தையிலேயே சுழற்சி முறையில் தங்களுக்கான உத்தரவு கொடுக்க வேண்டும்.

கொண்டுவரும் பொருட்களை பாதுகாப்போடு வைத்து விற்பனை செய்ய முடியும் மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டால் கால்நடைகள் தொந்தரவு மட்டுமல்லாமல் பொருட்கள் திருடப்படும் அபாயமும் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது இயங்கி வரும் இடத்திலேயே உழவர் சந்தை செயல்படும் என தெரிகிறது. வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, இம்முடிவுக்கு மாவட்டம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!