ஊட்டி எஸ்.ஐ., காருக்குள் பெண் சடலம் அடித்து கொலையா?: போலீஸ் விசாரணை

ஊட்டி எஸ்.ஐ., காருக்குள் பெண் சடலம்  அடித்து கொலையா?: போலீஸ் விசாரணை
X
ஊட்டி போலீஸ் ஸ்டேஷன் படம்
உதகை காந்தள் பகுதியில் போலீஸ் எஸ்.ஐ., காரில் பெண் சடலம் இருந்ததால் , எஸ்.ஐ.,யை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி:

உதகை காந்தள் பகுதியில் போலீஸ் எஸ்.ஐ., காரில் பெண் சடலம் இருந்ததால் , எஸ்.ஐ.,யை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதகை காந்தள் புதுநகர் பகுதியை சேர்ந்த கியூ பிரிவில் எஸ். ஐ., யாக முஸ்தபா (55) பணிபுரிந்து வருகிறார். இன்று காலை காந்தள் புதுநகர் பகுதியில் இவரின் காரில், பெண் சடலம் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ பகுதிக்கு எஸ்.பி., ஆசிஷ் ராவத், டவுன் டி.எஸ்.பி., மகேஷ்வரன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். எஸ்.ஐ., முஸ்தபா முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி வந்ததால், ஊட்டி ஜி1 போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

காரில் சடலமாக கிடந்தது காந்தள் புதுநகரை சேர்ந்த ராஜன் மனைவி, மாகி, 52, என தெரிய வந்துள்ளது. எஸ்.ஐ., முஸ்தபாவுக்கும் மாகிக்கு இடையே கள்ளத்தொடர்பு உள்ளது.

மாகியை நேற்று வெளியே அழைத்து சென்று கொலை செய்திருக்கலாம் என, தெரிகிறது. உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

எஸ்.பி., ஆசிஷ் ராவத் கூறுகையில், ''இந்த கொலை சம்மந்தமாக எஸ்.ஐ., ஒருவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின் முழு விவரம் தெரிய வரும்,'' என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்