கொரோனா பரவல் : உதகை மலர் கண்காட்சி ரத்து -ஆன்லைனில் பார்க்க ஏற்பாடு
ஊட்டியில் இணையதளத்தில் மலர் கண் காட்சியை காணும் வகையில் திறந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.உடன் கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா.
ஆண்டுதோறும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியானது இந்த முறை கொரோனா காரணமாக 2வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் மலர் கண்காட்சியை இன்று முதல் ஐந்து நாட்கள் காணும் வகையில் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் உலகப் புகழ் பெற்ற மலர் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் அரசு தாவரவியல் பூங்காவில் நடை பெறுவது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் மே மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியை 1.50 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்தனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று இணையதளம் மூலம் இந்த மலர் கண்காட்சியை காணும் வகையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். 25 ஆயிரம் மலர் தொட்டிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை அனைவரும் காணும் வகையில் (Virtual Mode) மற்றும் சமூக ஊடகத்தில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பெரும் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவிட் தடுப்பூசி போடுங்கள் என்ற வாசகம் சிறப்பாக பூத்துக்குலுங்கும் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu