நீலகிரியில் 13 மையங்களில் 108 சுற்றுக்களில் வாக்கு எண்ணிக்கை

நீலகிரியில் 13 மையங்களில் 108 சுற்றுக்களில் வாக்கு எண்ணிக்கை
X

ஆட்சியர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்தில், வாக்கு எண்ணும் 13 மையங்களில், 61 மேஜைகள் அமைக்கப்பட்டு 108 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.

நீலகிரி மாவட்டத்தில், 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள், உதகை, கூடலூர் குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் ஆகிய ஆறு தாலுக்காக்களில் உள்ள 13 மையங்களில் நாளை எண்ணப்படுவதாக மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித் கூறினார்.

இது குறித்து, உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் 800 க்கு மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கூறினார். வாக்கு எண்ணும் 13 மையத்தில் 61 மேஜைகள் அமைக்கப்பட்டு 108 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 324 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு வாக்கு எண்ணக்கை மையத்தில் 3 நுண்பார்வையாளர்கள் என 13 வாக்கு எண்ணும் மையத்தில் 45 நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில ஈடுபடவுள்ளதாகவும் ஆட்சியர் அம்ரித் கூறினார்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!