தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி 'டாப்' - கலெக்டர் தகவல்

தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி டாப் - கலெக்டர் தகவல்
X
தமிழகத்தில், 47% தடுப்பூசி செலுத்தி நீலகிரி முதன்மை மாவட்டமாக உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிரது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மலை மாவட்டமான நீலகிரியில், நாளுக்குநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நீலகிரி ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கூறியதாவது:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 43 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்த முன் வரவேண்டும். முதல் மற்றும் இரண்டாம் டோஸ் செலுத்தியவர்களுக்கு, பெரும்பாலும் தொற்று கண்டறியப்படவில்லை அதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

மே 1-ஆம் தேதிக்குப் பிறகு, 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் இருப்பு போதுமான அளவு உள்ளது. தற்போது மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் பள்ளிகளிலும் தயார்நிலையில், கொரோனா படுக்கைகள் உள்ளன.

மே இரண்டாம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு , கொரோனா இல்லை என்ற சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் நாளில், 470 பேர் பணியில் அமர்த்தபட உள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil