நீலகிரி மலைரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றநாள் கொண்டாட்டம்

உலகிலேயே இதுபோல ரயில்சேவை ஓரிரு இடங்களில் தான் உள்ளன. இந்த மலை ரயிலுக்கு, 2005 ஜூலை, 15-ல் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது

நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் என்எம்ஆர் பெயர் பெற்ற இரயில், 1854ம் ஆண்டு மலை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, முதன்முதலாக உருவாக்கப்பட்டது. 1891ம் ஆண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

இதனை தொடர்ந்து 1899ம் ஆண்டு, மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 1908ம் ஆண்டு, ஊட்டி வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. உலகிலேயே இதுபோல ரயில்சேவை ஓரிரு இடங்களில் தான் உள்ளன.

இந்த மலை ரயிலுக்கு, 2005 ஜூலை, 15-ல் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து, 16வது ஆண்டின் துவக்க விழா, நேற்று கோலாகலமாக நடக்க வேண்டிய நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக குன்னுார் ரயில் நிலையம் சுற்றுலா பயணிகளின்றி பொலிவிழந்து காணப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்