கொரோனா நிவாரண நிதி வழங்கியோருக்கு நீலகிரி கலெக்டர் நன்றி

கொரோனா நிவாரண நிதி வழங்கியோருக்கு நீலகிரி கலெக்டர் நன்றி
X
முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியோருக்கு, நீலகிரி ஆட்சியர் நன்றி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில், தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதி கணக்கிற்கு கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதியாக 2020-2021ஆம் ஆண்டில், இன்று வரை, ரூ.68,68,025, வழங்கப்பட்டுள்ளது. இதில், நடப்பாண்டில் மட்டும் இன்று வரை ரூ.13,53,679/ பெறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை வழங்கிய நீலகிரி மாவட்ட பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!