நடுவட்டம் பேருராட்சியில் முழு தூய்மை பணி

நடுவட்டம் பேருராட்சியில் முழு தூய்மை பணி
X

உதகை நடுவட்டம் பகுதியில் தூய்மைப்பணி மேற்கொண்ட காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில் நடுவட்டத்தில் தூய்மை பணி நடந்தது.

கொரோனோ இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில்நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல், பிளீச்சிங் பவுடர் வீசுதல், உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நடுவட்டம் பேரூராட்சி சார்பில் இன்று டி.ஆர். பஜார், அனுமாபுரம், நடுவட்டம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் செயல் அலுவலர் நந்தகுமார் தலைமையில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்