சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக்கோரி உதகையில் வியாபாரிகள் மறியல்

சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, உதகையில் 500 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா நகரங்களில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் அனைத்து சுற்றுலா தலங்களில் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த, உதகை சுற்றுலா தலங்களில் உள்ள வியாபாரிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டும் கொரோனா ஊரLங்கு காரணமாக முழுமையாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது; இந்த ஆண்டும் தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதித்திருப்பது தங்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளதாக, வியாபாரிகள் கூறினர்.

சுற்றுலா பயணிகளை நம்பி லட்சக்கணக்கில் வியாபாரம் செய்ய பொருட்கள் கொள்முதல் செய்துள்ளதாகவும் பெரும்பாலும் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள், பல லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாக வும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் 50 சதவிகிதமாவது சுற்றுலா பயணிகளை அனுமதித்து தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இக்கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், குடும்பத்துடன் இந்த போராட்டத்தை தொடரவிருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!