உதகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க பொதுக்குழு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:- 2008-ம் ஆண்டு முஸ்லிம் மகளிர் சங்கமும், 2019-ம் ஆண்டு கிறிஸ்தவ மகளிர் சங்கமும் தொடங்கப்பட்டது. இச்சங்கம் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள், ஏழை, எளிய பெண்களின் வாழ்க்கை தரம் உயர உதவி செய்யப்பட்டு வருகிறது.
சங்கம் மூலம் வசூல் செய்யும் தொகைக்கு அரசு இணை மானியம் வழங்குகிறது. ஆண்டிற்கு ரூபாய் 10,00,000 நன்கொடையாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம் சங்கம் மூலம் திரட்டப்பட்ட நன்கொடை மற்றும் இணை மானியம் சேர்த்து ரூபாய் 71,13,761-ல் 436 பயனாளிகளுக்கு ரூபாய் 48,01,403 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சங்கங்கள் கையிருப்பில் உள்ள தொகைக்கு ஏற்றவாறு உரிய பயனாளிகளின் விண்ணப்பங்களை உறுப்பினர்கள் பரிசீலித்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கலெக்டர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சப்பைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டேர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் லோகநாதன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu