ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு : உதகையில் கடைகள் திறப்பு

ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு : உதகையில் கடைகள் திறப்பு
X

உதகையில் திறக்கப்பட்டுள்ள டீ கடை.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் உதகையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

நீலகிரி : தமிழக அரசு ஊரடங்கு தளர்வில் புதிய அறிவிப்பை அறிவித்துள்ள நிலையில் உதகையில் நகைக் கடைகள் துணிக் கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் திறக்கப்பட்டன.


தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் நீலகிரி மாவட்டமும் உள்ளதால் கூடுதல் தளர்வுகளில் அழகு நிலையங்கள், ஹார்டுவேர்கள், மின்சாதன பொருட்கள், பேக்கரி உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்களை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது.


இதையடுத்து உதகை நகரில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் இன்று திறக்கப்பட்டன. மேலும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்போது வழிகாட்டப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!