நாளை முதல் முழு ஊரடங்கு : உதகையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

நாளை முதல் முழு ஊரடங்கு : உதகையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
X

கொரோனா பரவல் அச்சமின்றி ஊட்டியில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொருட்கள் வாங்க ஊட்டியில் மக்கள் குவிந்தனர்.

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் இன்று அனைத்து கடைகளும் திறந்திருக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதை அடுத்து உதகையில் அதிகாலையிலேயே கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் ஏராளமானோர் பொருட்களை வாங்க குவிந்தனர். கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் ஒரு வாரத்திற்கு புதிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று ஒருநாள் மட்டுமே அனைத்து கடைகளும் திறந்திருக்கும். நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் முழு ஊரடங்கு

இதையடுத்து உதகை நகரில், காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட அனைத்து கடைகளும் இன்று அதிகாலை முதலே திறக்கப்பட்டு செயல்பட தொடங்கின. ஒரு வாரத்திற்கான பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட் பகுதியில் குவிந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!