உதகை அருகே விவசாய நில தடுப்பு வேலியில் சிக்கி சிறுத்தை பலி

உதகை கேத்தி பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே, கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லநள்ளி அருகே உள்ளது, ஜோதிநகர் . இப்பகுதியில், அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் சிக்கிய, 3 வயது மதிப்புடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு பாதுகாப்பு மீட்புக்குழுவினர்கள், பாதுகாப்பு உடை அணிந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், சிறுத்தையை உயிருடன் மீட்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், 11 மணி நேரம் போராட்டத்திற்கு பின், சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்த சிறுத்தை, பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தெரிவித்தார்.

Tags

Next Story
ai as the future